களைகட்டிய ‘கயல்’ சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…

By Begam

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி. அப்பாவினால் கைவிடப்பட்ட தனது குடும்பத்தை ஒரு மூத்த மகளாக எடுத்து நின்று, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் எப்படி போராடுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.

   

இவருக்கு ஜோடியாக எழிலரசன் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை சைத்ரா ரெட்டி முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் நடித்த ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், ஆண்ட்ரியா நடிப்பில்  வெளியான ‘வட்டம்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சைத்ரா  ரெட்டி. இவர் அவ்வப்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்று  நடிகை சைத்ரா ரெட்டி இன்று தனது 28 வது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…