நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூமிகா. மேலும் ரோஜா கூட்டம் சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பூமிகா நடித்திருக்கிறார் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பூமிகா அதிகமாக நடித்துள்ளார். தற்போது அவர் அக்கா அண்ணி போன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார். இப்போது யூ போரியா என்ற படத்தில் பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழா மேடையில் பேசிய நடிகை பூமிகா, இந்த படத்தில் நடிக்க தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என்று பேசியபடி தேம்பித் தேம்பி அழ தொடங்கி விட்டார். அருகில் இருந்த மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
யூபோரியா படம் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை குணசேகர் டைரக்ட் செய்திருக்கிறார். பூமிகா சாரா அர்ஜூன் ப்ருத்வி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்த உண்மைகளால் தன்னால் தூங்க முடியவில்லை என்று பூமிகா மேடையில் அழுத சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
