பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிசியாக வலம் வரும் பானுப்ரியா ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அதனால் அவர் சந்தித்த அவமானங்களை பகிந்துள்ளார்.

Actress Bhanupriya
சைதை தமிழரசியாக தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பானுப்ரியா. ஆந்திர மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் பானுப்பிரியா. இவருக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள். பானுவின் உண்மையான பெயர் மங்கம்மா. அவருக்கு முதல் தமிழ் படம் பெரிதாக கிளிக் ஆகாத நிலையில், தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார். அதற்கு பலன் கிடைத்தது.

Bhanupriya family
ஒரு கட்டத்தில் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார். பானுப்பிரியாவுக்கு 1998-ல் திருமணம் நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் இடையிலேயே இறந்து போகிறார். இதனையடுத்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. மீண்டும் நடிப்பதற்கு வருகிறார்.

Actress Bhanupriya
அவருக்கு சென்னையில் மிகப்பெரிய வீடு இருந்தது. பர்சனல் பிரச்சினைகள் காரணமாக, அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு ஏ.வி.எம் சரவணன் தன்னுடைய ஸ்டியோவில் உள்ள ஒரு அறையை கொடுத்து தங்க வைத்தார். அவருக்கு இருந்த புறக்கணிப்பு, குடும்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் வந்து விட்டது.

Bhanupriya sad life story
அதன் பின்னர் நாட்கள் ஓட, அவருக்கு நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினை வந்துவிட்டது. குறிப்பாக படத்தில் வசனங்களை சொல்லும் பொழுது, அவரால் முன்பு போல சரளமாக பேச முடியவில்லை. இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த படத்தின் இயக்குநர் கேமராவின் பின்னால் இருந்து வசனங்களை சொல்லச் சொல்ல, பானு அதனை பேசினார். அது அவருக்கு மிகவும் ஒரு குற்ற உணர்வை கொடுத்தது. இதனையடுத்து அவர் மொத்தமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார்.

Bhanupriya talks about her alzheimer
அப்படி இருந்தும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பானுப்ரியாவை, இளம் நடிகர் ஒருவர் பேசிய பேச்சு அவரை மிக் பாதித்துள்ளது. இதுகுறித்து பானுப்ரியா கூறும்போது, என்னால் வசனங்களை நிஜாபாகம் வைத்து சொல்ல முடியாமல் தவித்து வந்தேன், இதனால் பல டேக்குகள் போனது. இதனால் எரிச்சலான படத்தின் ஹீரோ, இந்தம்மாவை மாத்துங்க, இல்லை என்றால் இவருக்கு டயலாக் இல்லாமல் நடிக்க வையுங்க என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். நான் 157 படங்கள் நடித்துள்ளேன், அதில் 10 படங்கள் கூட அவர் பார்த்திருக்க மாட்டார், ஆனால் என்னை அவ்வாறு பேசியது எனக்கு மனா வேதனையை தந்தது என பேசியுள்ளார் நடிகை பானுப்ரியா.