நடிகை பெர்னா பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகை பெர்னா மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் 2022-ஆம் ஆண்டு வெளியான இளமை என்னும் பூங்காற்று படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது குற்றச்சாட்டு என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பெர்னா கூறியதாவது, இலங்கையில் படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் மீது இருந்த ஆர்வத்தால் சினிமா சான்ஸ் தேடி தமிழ்நாட்டில் அலைந்தேன். ஆரம்பத்தில் chubby-யாக இருந்ததால் பட வாய்ப்புகள் இல்லை. பின்னர் பிட்டாக உடம்பை வைத்துக் கொள்வதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்தேன்.
மாஸ்டர் படத்தில் எனக்கு கடைசி நேரத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ரஜினி சாரோட பாடல் கட்சியில் சீன் என்று மட்டும் தான் கூறினார்கள். அந்த காட்சியை படமாக்கிய போது திடீரென ரஜினி சார் என் கன்னத்தை புடிச்சு கிள்ளிட்டாரு.
எனக்கே அவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட் என் கன்னத்தை கிள்ளுறாரேனு பார்த்தேன். முதலில் இயக்குனர் அந்த சீனை என்கிட்ட சொல்லல. படபிடிப்பு தளத்தில் ரஜினி சார் திடீர்னு அப்படி பண்ணியதும் இயக்குனர் இது நல்லா இருக்குன்னு சொல்லி மிட்சாட் ஒன்றையும் படமாக்கினர். ரஜினி சார் கன்னத்தை கிள்ளிய பொண்ணு என்று சினிமா வட்டாரத்தில் கொஞ்சம் பேமஸ் ஆனேன் என கூறியுள்ளார்.