Categories: சினிமா

என்னுடைய உண்மையான பெயரே இது இல்ல.. ரசிகர்களுக்கு திடீரென ஷாக் கொடுத்த நடிகை அதுல்யா ரவி..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமான காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் இதயங்களை வென்ற இவர் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும் இயல்பான நடிப்பும் அவருக்கு திரையுலகில் ஒரு தனி இடத்தை பிடிக்க உதவியது. அந்த படத்திற்கு பிறகு ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சண்டை, கேப்மாரி மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பட பட்டியலை தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.

தற்போது அவர் நடிப்பில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை அதுல்யா ரவி பலரும் அறியாத ஒரு உண்மையை பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில், நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு முடிக்கும் வரை காதல் கண் கட்டுதே படத்தில் நடித்தேன். ஆனால் முதலில் அது ஒரு ஷார்ட் பிலிம் என்றுதான் நாலு வருஷமா அந்த படத்துல நடித்தேன்.

அதன் பிறகு தான் ஒரு நாள் போன் பண்ணி அது ஷார்ட் பிலிம் இல்ல படமாக போகுது என்று சொன்னாங்க. உண்மையிலேயே என்னுடைய பெயர் திவ்யா ரவி தான். ஆனா அந்த படம் ரிலீஸ் ஆகுதுன்னு சொன்னப்ப என்னுடைய பெயர் போடுறதுக்கு என்னுடைய இந்த பேர மட்டும் போடாதீங்க கூகுள்ல தேடினால் சீக்கிரம் வர மாதிரி ஒரு பெயரை போடுங்க என்று சொல்லிட்டு காலேஜ் போயிட்ட. வந்து பார்த்தா அதுல்யா ரவி என்று போஸ்டரில் போட்டிருந்தாங்க. அப்புறம் அந்தப் பேரு எனக்கு செட் ஆயிருச்சு என்று அதுல்யா ரவி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

2 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

10 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

58 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

59 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

2 மணத்தியாலங்கள் ago