நடிகை ஆஷ்னா சவேரி கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீசான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா நடித்தார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஆஷ்னா ஒரு மாடலாக தனது கேரியரை ஆரம்பித்தார்.
சந்தானத்துடன் ஆஷ்னா இணைந்து நடித்த படம் சுமாராக வசூல் செய்தது. அதன் பிறகு இனிமே இப்படித்தான் படத்திலும் ஆஷ்னா நடித்தார். சந்தானத்துடன் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மனதில் ஆஷ்னா இடம் பிடித்தார்.
அதன்பிறகு காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஆஷ்னா நடித்த பிரம்மா, காம், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களும் தோல்வியை சந்தித்தது.
விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தார். சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் கிளாமரில் களமிறங்கி விட்டார். கடந்த ஆண்டு ஆஷ்னா நடித்த கன்னித்தீவு திரைப்படம் ரிலீஸ் ஆனது.
மேலும் MY3 என்ற வெப் சீரியசிலும் ஆஷ்னா நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். தற்போது படு கிளாமராக ஆஷ்னா வெளியிட்ட போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.