சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா நிஜத்தில அல்ட்ரா மாடர்ன்.. தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகையின் கிளாமர் போட்டோஸ் வைரல்..

By Mahalakshmi

Published on:

கர்நாடகாவில் பிறந்த நடிகை  அக்ஷிதா போப்பையா தமிழ் மற்றும் கன்னட மொழி சீரியல் மற்றும் படங்களில் கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.  இவர் தற்போது, பிரவுன் கலர் மாடல் உடையில் கிளாமராக  போட்டோஸ் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து அந்த போட்டோஸ் ரசிகர்களால் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

   

 

நடிகை அக்ஷிதா, கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் தற்பொழுது முன்னணி சீரியல் நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், இவர் மாடல் அழகியாக  கலை உலகில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.  தமிழ் மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல “அழகு” சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதனை தொடர்ந்து கன்னடத்தில் சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

தற்பொழுது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” நாடகத்தில்  வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார் நடிகை அக்ஷிதா. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேலும் ரசிகர்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

 

தற்போது நடிகை அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் உடையில் எடுத்துள்ள   புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம்  அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்த வண்ணம் உள்ளது.

author avatar
Mahalakshmi