சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகையாக வலம் வரும் அறந்தாங்கி நிஷா மகளின் காதுகுத்து ஃபங்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் பெண் காமெடியார்கள் இருப்பது என்பது மிகவும் பெரிய விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றாலே ஆண்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஆண் போட்டியாளர்களுக்கு நிகராக தனது ஸ்டாண்ட் அப் காமெடியில் சிறந்து விளங்கினார். நகைச்சுவை பேச்சாளராக மேடைகளில் கலக்கி வந்த அறந்தாங்கி நிஷா தற்போது சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கின்றார். வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த அசதி வருகின்றார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் தற்போது அடுத்த சீசன் ஒளிபரப்பாக இருக்கின்றது. அதிலும் அறந்தாங்கி நிஷா தான் தொகுப்பாளராக கலந்து கொள்ள இருக்கின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றார். குக் வித் கோமாளி சீசன் ஒன் தொகுப்பாளியாக இருந்த அவர் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது தான் அவர் கர்ப்பிணியாக இருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. காமெடி மட்டுமில்லாமல் தனது செயலிலும் உன்னதமான பெண்ணாக வலம் வருகின்றார் அறந்தாங்கி நிஷா.

சமீபத்தில் சென்னையில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு உதவி செய்திருந்தார். தன் மகள் உடல்நிலை சரியில்லாமல் ஐசியூ-வில் இருந்த போதும் கூட அதை கவனிக்காமல் உதவி வழங்குவதில் முழு கவனம் செலுத்தி பலருக்கும் தேவையான பொருட்களை கொடுத்து வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷாவின் மகளுக்கு காது குத்து விழா நடைபெற்றுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்க மகள் பார்ப்பதற்கு உங்களைப் போல இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
View this post on Instagram
