நடிகர் ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி ஷோவில் பங்கேற்று பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியின் முடிவில் அபர்ணதியை திருமணம் செய்ய நடிகர் ஆர்யா மறுத்துவிட்டார். அது ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்றும் சொல்லப்பட்டது. பிறகு ஜெயில் தேன் இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் அபர்ணதி நடித்தார். இப்போது வெஞ்சன்ஸ் என்ற படத்தில் அபர்ணதி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இதுகுறித்து நடிகை அபர்ணதி கூறியதாவது, நான் முதன்முறையாக கதையின் நாயகியாக கலெக்டராக இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்த கதை அரசியல் சார்ந்த விஷயங்களை மிகவும் ஆழமாக பேசுகிறது. என்னுடன் ஒய்ஜி மகேந்திரா ஜான் விஜய் போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அறம் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன.
எனக்கு நடிகர் ஆர்யாவுடன் நடிப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை. அவருடன் அந்த டிவி ஷோவில் நிறைய வாரங்கள் ஒன்றாக நடித்தது மனசுக்கு பசுமையாக இருக்கிறது. அதை ஒரு ஹீரோயினாக வேறு படத்தில் நடித்து அந்த நினைவுகளை அழிக்க விரும்பவில்லை. மற்றபடி ஆர்யாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று நடிகை அபர்ணதி கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…