Connect with us

தன்னுடைய பேங்க் பேலன்ஸ் சொல்லி.. கவின் பட நடிகைக்கு ப்ரொபோஸ் பண்ணிய பிரபல நடிகர்.. மனம் திறந்த அபர்ணா தாஸ்..!

CINEMA

தன்னுடைய பேங்க் பேலன்ஸ் சொல்லி.. கவின் பட நடிகைக்கு ப்ரொபோஸ் பண்ணிய பிரபல நடிகர்.. மனம் திறந்த அபர்ணா தாஸ்..!

 

கவின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் தனது காதல் கணவர் தனக்கு ப்ரபோஸ் செய்த முறையை ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா தாஸ். 2018 ஆம் ஆண்டு வெளியான பிரகாஷ் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். மலையாள குடும்பத்தை சேர்ந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் தான் முடித்தார். முதுகலை படிப்பை முடித்த இவர் ஒரு கணக்காளராக பணியாற்றிய போது பத்திரிகைகளுக்கு மாடலாக இருந்திருக்கின்றார்.

   

பின்னர் tiktok வீடியோக்களையும் செய்து பதிவேற்றம் செய்து இருக்கின்றார். இதை பார்த்து 2018 ஆம் ஆண்டு பிரகாஷ் என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் 2019 ஆம் ஆண்டு மனோகரன் படத்தில் வினு ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் திரைப்படத்திலும், 2023 ஆம் ஆண்டு டாடா திரைப்படத்திலும் நடித்த தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. மஞ்சுமேல் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த தீபக் ராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது, கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிக எளிமையாக ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணம் குறித்து இதுவரை எதையும் பேசாமல் இருந்த அபர்ணா தாஸ் முதன் முறையாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டில் வெளியான மனோகரன் திரைப்படத்தில் தான் நாங்கள் இருவரும் பழகி வந்தோம். பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருக்கின்றது. முதல் முறையாக அவரை வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டு கை கழுவுகின்ற இடத்தில் என்னை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூறினார். அது எனக்கு பிடித்திருந்தது.

பின்னர் மனோகரன் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது நானும் அவரும் என்ன பேசிக் கொண்டோம் என்பது எனக்கு பெரிதாக நினைவில் இல்லை. எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. அவர் என்னிடம் காதலை சொன்னது மிகவும் வித்தியாசமாக இருந்தது. என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவுதான் பணம் உள்ளது.

நான் அதிகம் கோபப்படுவேன் பணம் இல்லாவிட்டால் நாம் கஷ்டப்பட வேண்டும். ஆனால் நான் இருக்கும் வரை உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி ப்ரபோஸ் செய்தார், அவர் தன்னை அணுகிய முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் இருவரும் காதலித்தோம் எங்கள் வீட்டில் கலந்து பேசி சுமுகமாக பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top