ஜோடி செம சூப்பர் டோய்.. மஞ்சுமெல் பாய்ஸ் பட ஹீரோவை கரம் பிடிக்கும் டாடா பட நடிகை..

By Priya Ram

Updated on:

பிரபல நடிகை அபர்ணாதாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு நான் பிரகாசன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் வினித் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

   

இதனையடுத்து தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணாதாசின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் பிறகு பிரியன் ஓட்டத்திலானு என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்தார். முக்கியமாக கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்த டாடா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்த நிலையில் அபர்ணாதாசுக்கு தீபக் பரம்போல் என்பவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற 24-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தில் தீபக் பரம்போல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram