Connect with us

சந்தனம் மஞ்சள் பூச களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்.. அழகு தேவதை டாடா பட நடிகை அபர்ணாதாஸின் திருமண வைபவம்..!

CINEMA

சந்தனம் மஞ்சள் பூச களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்.. அழகு தேவதை டாடா பட நடிகை அபர்ணாதாஸின் திருமண வைபவம்..!

மலையாள சினிமாவில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். அப்படி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஒரு நடிகை தான் அபர்ணா தாஸ். இவர் முதன்முதலாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.

பின்னர் நடிகர் கவின் உடன் சேர்ந்து இவர் நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென்று திருமணம் என பத்திரிகை வெளியிட்டு இருந்தார்.

   

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த தீபக் பரம்பொல் என்பவரை இவர் நாளை திருமணம் செய்ய இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அந்த திரைப்படத்திலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட தற்போது திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு அவர்கள் ஹல்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாவாடை தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறார் அபர்ணாதாஸ்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top