“எல்லாரும் முன்னாடியும் அப்படி கேட்டுட்டாரு…” அதை என்னால தாங்க முடியல…. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த அபர்ணா பாலமுரளி….!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

திரையுலகில் ஹீரோயின்கள் உடல் தோற்றம் குறித்த விமர்சனங்களை சந்திக்கின்றனர். அந்த வகையில் நடிகை அபர்ணா பாலமுரளி தனது கசப்பான அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஒருமுறை விமான நிலையத்தில் வைத்து ஒரு நபர் என்னிடம் நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய் என்று கேட்டார். அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எல்லார் முன்னிலையிலும் அப்படி கேட்டபோது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

என்னைப்பற்றி எப்படி இப்படி சொல்லலாம் என அவரிடம் சண்டை போட்டேன். அது பெரும் தவறு எனக் கூறினேன். அவரும் மன்னிப்பு கேட்டார். ஒரு காலத்தில் இது போன்ற வார்த்தைகளை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் இப்போது வலிமையாகி விட்டேன். எதிர்மறை கருத்துக்களை பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை எனக் கூறியுள்ளார். அபர்ணா பாலமுரளி தமிழில் சூரரை போற்று, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அபர்ணா பாலமுருளி நடிப்பில் உருவான மிராஜ் திரைப்படம் வருகிற 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.