‘சிவா மனசுல சக்தி’ பட நடிகையா இது?… இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

By Begam

Published on:

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் 2009ல் வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இத்திரைப்படத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், அனுயா, சினேகா முரளி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.

   

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும்  சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். காமெடி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஜீவா காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை அனுயாவின் காமெடியும் படத்தில் செய்யும் கேலிக்கூத்துகளும் ரசிக்கும்படியாக இருந்தது.

இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு, இதைத்தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. இந்நிலையில் நடிகை அனுயாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘SMS பட நடிகையா இவர்?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….