தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி மற்றும் கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்னும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். இவர் தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை டர்ட்டி பிக்சர் என்று படமாக எடுத்துள்ளார்கள். இப்படி இருந்தும் இவருடைய வாழ்க்கையில் எவ்வளவு சொல்லப்படாத விஷயங்கள் மர்மமாக இன்றும் உள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் காதல் தோல்வி, குடிப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இந்தியா முழுவதும் ஒரு பெரிய காட்டு தீ போல பரவியது. இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சி கொள்ளாக்கியது.
மேலும் இவரின் இழப்பு அதிகமாக அவருடைய தோழி அனுராதாவை தான் பாதித்தது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக அனுராதாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, எனக்கு மனசு சரியில்லை, ஒருமுறை உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் வர முடியுமா என் வீட்டுக்கு என்று கேட்டுள்ளார். ஆனால் அனுராதா, பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருப்பதாலும் கணவர் வெளிநாடு சென்று இருந்த காரணத்தாலும் தன்னால் வர முடியாது எனக் கூறியுள்ளார்.
ஏன் இவ்வளவு அவசரமாக வர சொல்கிறாய் நான் இப்போதே வரட்டுமா என்று அனுராதா கேட்க, இல்லை நீ காலையில் வா என்று சில்க் ஸ்மிதா கூறிவிட்டு போனை வைத்து விட்டார். பிறகு அன்று இரவு அனுராதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்ப அதிகாலையில் போன் வந்துள்ளது. அதில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. இந்த தகவல் தன் நெஞ்சை பிளக்கும் அளவிற்கு இருந்தது. அவளுடைய அழைப்பை ஏற்று நான் அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தால் இன்று அவள் உயிருடன் இருந்திருப்பாள். அன்று நான் அவளுடைய வீட்டுக்கு செல்லாத குற்ற உணர்ச்சி இன்று வரை எனக்குள் உள்ளது. அந்த குற்ற உணர்ச்சியால் நாளுக்கு நாள் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் என அனுராதா மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.