மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். தமிழில் கொடி டிராகன் பைசன் காளமாடன் போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நான் மட்டன் சாப்பிடுவதில்லை என்ற ஒரு தகவலை அவர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதுபற்றி அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் கார்த்திகேயா 2 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சூட்டிங் நடந்த இடத்தில் ஆடுகளை வளர்க்கும் பட்டி இருந்தது. சூட்டிங் இடைவெளியில் அங்கிருந்த ஆடுகளுடன் நான் விளையாடுவது வழக்கம். ஒருநாள் மதியம் எங்களுக்கு சூட்டிங்கில் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.
அன்று மாலை தான் என்னுடைய உதவியாளர் மூலமாக, மதியம் பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணிக்கு நான் எந்த ஆட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தேனோ அந்த ஆட்டை வெட்டி உணவாக்கி இருக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அன்று முழுவதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. அன்று முதல் நான் இப்போது வரை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன். இப்போதும் கூட அந்த சம்பவம் என்னை சில நேரங்களில் அப்செட் ஆக்கி விடுகிறது என்று அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.
