திருடா திருடா பட நடிகையா இது..? முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam on பிப்ரவரி 9, 2024

Spread the love

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம்  திருடா திருடா. இத்திரைப்படம் காதல், ஆக்ஷன்  பண கடத்தல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ரசிகர்களை வியக்க வைத்தது. பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ்பி.பாலசுப்ரமணியம், சலீம் கௌஸ் என பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

   

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இத்திரைப்படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது. குறிப்பாக  பேலஸ் வளாகத்தில் நடிகை அனு அகர்வாலின் அசத்தலான நடனத்தில் சந்திரலேகா என்ற பாடல் சூப்பராக அமைந்திருக்கும். இப்போதும் அந்த பாடலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

   

 

நடிகை அனு அகர்வால் தமிழில் ‘திருடா திருடா’ படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால்  இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். 1996ல் வெளியான ரிட்டர்ன் ஆஃப் ஜூவல் தீஃப் என்ற ஹாலிவுட் படத்தில் இளவரசி விஷாகாவாக நடித்திருந்தார்.

தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் திருடா திருடா படத்தில் பார்ப்பதற்கு கியூட்டாக இருந்த அவரின் முகத்திற்கு தற்பொழுது என்ன ஆனதென்று தெரியவில்லை. முகமெல்லாம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வயதான தோற்றத்தில் காணப்படுகிறார்.  இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…