தந்தை வயது நடிகரை திருமணம் செய்த நடிகை அஞ்சு….விவாகரத்து….வைரலாகும் பேட்டி …

By Begam on புரட்டாதி 10, 2022

Spread the love

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சு. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து கலக்கியவர் நடிகை பேபி அஞ்சு.

   

ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்த இவர் நடிப்பினை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர் தன்னைவிட வயதில் மூத்தவரான நடிகர் பிரபாகரை 1995ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்தார்.

   

 

பெற்றோரிடம் வந்து சேர்ந்த அஞ்சு நான்கு மாத கர்ப்பம் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.  திருமண வாழ்க்கை குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ‘அவர் நடிகர் பிரபாகரன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு முன்னர் அவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது.

நான் நான்காவது மனைவி என்று தெரிந்தவுடன் பிரபாகரனை விட்டு நான் வந்து விட்டேன். அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது நான் நான்கு மாத கர்ப்பம் என்று. என்னை அவர் வந்து அழைத்தார் நான் செல்ல மறுத்து விட்டேன். என் மகனுக்கு இரண்டு வயதாகும் போது அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது ‘என்று அவர் அந்த பேட்டியில்  கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டியானது தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி  வருகிறது.