இப்படி நீங்க வெக்கப்பட்டா எங்களுக்கும் ஒரே வெக்கமா வருது.. டைட்டான வெல்வெட் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள அஞ்சு குரியன்..

By Begam

Updated on:

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஞ்சுகுரியன். இவர் மாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 2016இல் மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து மற்றும் 2018 இல் வெளியான நான் பிரகாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் அஞ்சுக்குரியன்.

   

இவர்  சுமத்திரன் இயக்கிய ‘நேரம்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாள திரை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார். இதை தொடர்ந்து ஓம் சாந்தி என்ற படத்தில் துணிக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இதை தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’  என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டு பெற்றது . தற்பொழுது இவர் பல்வேறு  திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அஞ்சுக்குரியன். இவர் அவ்வப்பொழுது தனது  போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட ஹாட் லுக் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் அழகில் கிறங்கி போய் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.