மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சு குரியன்.
நடிகர் நிவின்பாலியின் நேரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர், இக்லூ மற்றும் ஜூலை காற்றில் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் அஞ்சு குரியன் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால் அது மிர்ச்சி சிவாவின் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற திரைப்படம் தான்.
இதனை தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆடியோ ஆகியவற்றிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
இவருக்கு தமிழிலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அந்த படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அஞ்சு குரியன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…