Categories: சினிமா

“தலைவன்னா சூர்யா மாதிரி இருக்கணும்”.. கங்குவா இசை வெளியீட்டு விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கிய போஸ் வெங்கட்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ள நிலையில் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் ப்ரோமோஷனல் அடுத்தடுத்து மும்பை மற்றும் சென்னை என நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் சூர்யா உள்ளிட்ட படகு குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். அதேசமயம் சூர்யா தனிப்பட்ட முறையிலும் பல பேட்டிகளை கொடுத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த காட்சிகள் படத்தில் மொத்தமாக 2 மணி நேரங்கள் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படமானது முதலில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில் அன்றைய தினம் வேட்டையன் திரைப்படம் வெளியானதால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்படியான நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பட குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் பேசுகையில், ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி தர்மம் செய்ய இப்போவே சொல்லிக் கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு தான் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதை விட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகர்களை படிக்க வைக்க வேண்டும்.

அவனுக்கு அறிவை வளர்க்கணும் பிறகு தான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்குப் பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யா தான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்து விட்ட பிறகு அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று போஸ் வெங்கட் குறிப்பிட்டுள்ளார். விஜயின் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் போஸ் வெங்கட் இப்படி பேசி இருப்பதை விஜயை மறைமுகமாக தாக்கி தான் பேசியுள்ளார் என்று தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த பேச்சு பேசுபொருளாகியுள்ளது

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago