தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார் அஞ்சலி. அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. பின்னர் அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பின்னர் புது நடிகைகளின் வரவால் தமிழில் மார்க்கெட் குறைய தெலுங்குக்கு சென்றார் அஞ்சலி ,அங்கும் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்த அஞ்சலி தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திடீரென்று அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் சில காலம் நடிக்காமல் போனார். பின்னர் சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர் கிளாமரில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார்.

இந்த நிலையில் அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவுல நான் நடிச்ச படங்களில் என்னோட கேரக்டர் என்பது தனித்துவமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்ப்பேன். ஃப்யூச்சரில் நான் என்ன பண்ணேன் என்று யாராவது பார்க்கும்போது இப்படி ஒரு கேரக்டர் எல்லாம் அஞ்சலி பண்ணி இருக்காங்க என்று அவங்களுக்கு நினைவுக்கு வரணும். ஒரு டைரக்டர் எனக்கு ஒரு கேரக்டர் கொடுக்கிறார் என்றால் அதை நான் உண்மையாகவும் பொறுப்புடன் நடிக்க வேண்டும்.

சினிமாவுல என்னோட ஸ்கிரிப்ட் செலக்சன் எல்லாமே என்னோட கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். நான் அப்படி தான் ஒவ்வொரு படத்தின் கதையையும் தேர்ந்தெடுக்கிறேன். படத்தின் வெற்றி தோல்வி என்பது நம் கையில் இல்லை. ஆனால் படம் பார்த்துட்டு வெளியில வர வாங்க பரவால்ல அஞ்சலி கேரக்டர் நல்லா இருக்கு என்று சொல்லி பாராட்டிட்டு போகணும் என்று தான் நான் எதிர்பார்க்கிறேன். எனவே சினிமாவில் எனக்கு வரும் ஒவ்வொரு கதையையும் ரசிகர்கள் பாராட்டும் வகையில் இருக்கிறதா என்று யோசித்து தான் நான் தேர்ந்தெடுப்பேன் என அஞ்சலி கூறியுள்ளார்.
