அஞ்சலியை மேடையில் அலறவிட்ட நடிகர் பாலகிருஷ்ணா.. வைரலான விடியோவுக்கு அஞ்சலி கொடுத்த விளக்கம்..!

By Mahalakshmi on மே 31, 2024

Spread the love

கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலையா அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா என்கின்ற பாலையா.

   

நொடி நேரத்தில் 100 பேரை அடித்து நொறுக்குவது, ஒற்றை விரலால் ட்ரெயினை நிறுத்துவது, காரை எட்டி உதைப்பது என பல விஷயங்களை செய்து கரவொலிகளோடு கலெக்ஷனை அள்ளும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் இவர் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற திரைப்படத்தின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

   

 

அங்கு அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. அந்த நிகழ்ச்சியின் போது மேடைக்கு வந்த பாலையா அங்கு நின்று இருந்த அஞ்சலி, நேகா செட்டி ஆகியோரை தள்ளி நிற்குமாறு கூறினார். ஆனால் அஞ்சலி மெதுவாக நகர்ந்து நிற்கவே கடுப்பான பாலகிருஷ்ணா சற்று என்று அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டார், இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அஞ்சலி அதனை சிரித்துக் கொண்டே சமாளித்தார்.

பாலையாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில் அஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றுடன் சேர்த்து பாலையா குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலகிருஷ்ணா அவர்களும் நானும் ஒருவரை ஒருவர் எப்போதும் பரஸ்பர மரியாதை உடன் நடந்து வருகிறோம். நீண்ட கால நட்பை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதை அருமையான விஷயமாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த பலரும் அவர் நட்ப ரீதியாக தான் இப்படி நடந்து கொண்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.