Connect with us

தனது பிறந்த நாளை வெளிநாட்டில் சிறப்பாக கொண்டாடிய நடிகை அஞ்சலி.. இவ்வளவு வயசு ஆயிடுச்சா..?

CINEMA

தனது பிறந்த நாளை வெளிநாட்டில் சிறப்பாக கொண்டாடிய நடிகை அஞ்சலி.. இவ்வளவு வயசு ஆயிடுச்சா..?

 

நடிகை அஞ்சலி தனது 38வது பிறந்த நாளை வெளிநாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார் அஞ்சலி. அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.

   

பின்னர் அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் புது நடிகைகளின் வரவால் தமிழில் மார்க்கெட் குறைய தெலுங்குக்கு சென்றார் அஞ்சலி ,அங்கும் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்த அஞ்சலி தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

திடீரென்று அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் சில காலம் நடிக்காமல் போனார். பின்னர் சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர் கிளாமரில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார். சமீபத்தில் தாய்லாந்துக்கு ட்ரிப்பு சென்ற அஞ்சலி அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். அவருக்கு தற்போது 38 வயதாகின்றது. இதனை மிகச் சிறப்பாக கொண்டாடி இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அஞ்சலிக்கு இவ்வளவு வயசு ஆயிடுச்சா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top