அந்த படம் எனக்கு பிடிக்கல, ஆள விடுங்கடா என நினைத்தேன்.. மனம் திறந்த நடிகை ஆன்ட்ரியா..

By Deepika

Updated on:

பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா, தொடர்ந்து நடிகையாக அவதாரம் எடுத்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் தான் இவருக்கு திருப்புமுனையை. நல்ல நடிகையான இவர் பல படங்களில் நடிப்பதில்லை. தனக்கு வரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் வடசென்னை படத்தில் இவர் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Andrea in vadachennai

இந்த நிலையில் சமீபத்திய பெட்டியில் வடசென்னை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு வடசென்னை பற்றி எதுவும் தெரியாது, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சில நாட்கள் வடசென்னை சென்று வந்தேன், அவர்களின் வாழ்க்கை முறையே வித்தியாசமாக இருந்தது. அங்கு என்னால் வெகு நேரம் கூட இருக்க முடியவில்லை.

   
Andrea about vadachennai

ஆனால் அவர்களை பார்த்து அந்த உடல்மொழியை கற்றுக்கொண்டேன். அங்கு சென்று மீன் எல்லாம் கழுவினேன், ஆனால் இயக்குனர் அதை படத்தில் வைக்கவில்லை. அதுதான் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்தென் நீங்கள் வைக்கவில்லையே என தோன்றியது. ஆனால் அவர் வடசென்னை கதை கூறும்போது, ஆள விடுங்கடா சாமி என நினைத்து கொண்டேன். எனக்கு அது பிடிக்கவில்லை, ஆனால் அந்த படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது ஆச்சர்யம் தான் என கூறியுள்ளார்.

author avatar
Deepika