Connect with us

CINEMA

ராஜஸ்தானில் காதலருடன் ஊர் சுற்றும் ‘மதராசபட்டினம்’ பட நடிகை… ரொமான்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்கே… வைரலாகும் புகைப்படங்கள்… 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார்

   

. இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் இவர் பிரிட்டிஷ் பெண்ணாகவே நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து விக்ரமுடன் தாண்டவம், தனுஷ் உடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0 என பல படங்களில் நடித்த அசத்தியிருந்தார்.

இதை தொடர்ந்து அவர் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன் ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜார்ஜ் உடன் பிரேக் அப் ஆன சில மாதங்களிலேயே மீண்டும் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து அவருடன் டேட்டிங்கும் செய்து வருகின்றார் நடிகை எமி ஜாக்சன்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை எமி ஜாக்சன்.

இவர் தற்பொழுது தனது காதலருடன் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ள அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top