என்னை ‘மைனா’ படத்தின் ப்ரமோஷனுக்குக் கூப்பிடவில்லை.. அதற்கு நான் செய்த தவறுதான் காரணம்- மனம் திறந்த அமலா பால்

By vinoth on சித்திரை 5, 2025

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். அடுத்ததாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் இவர் ஏஎல் விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.  இதற்கு அமலா பாலின் கலாச்சார பின்னணியும் இயக்குனர் ஏ எல் விஜய்யின் கலாச்சாரப் பின்னணியின் செட் ஆகாததேக் காரணம் என சொல்லப்பட்டது.

   

   

பின்னர் பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர். இப்போது அமலா பால் மற்றும் ஏ எல் விஜய் ஆகிய இருவருமே தங்களுடைய திரைவாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் அமலா பால் தான் சிந்து சமவெளி படத்தில் நடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேசியுள்ளார். அதில் “ சிந்து சமவெளி படத்தின் விமர்சனங்கள் என்னைப் பயமுறுத்தின. அப்போது எனக்கு 17 வயதுதான்.  இதனால் நான் மன வேதனைக்கு ஆளானேன். என் சினிமா வாழ்க்கையிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மைனா பட ப்ரமோஷனுக்குக் கூட என்னை படக்குழுவினர் அழைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.