கையில் குழந்தையுடன் அமலாபால் வெளியிட்ட புகைப்படம்.. தலை சுற்றிப் போன நெட்டிசன்கள்..

By Priya Ram

Updated on:

முன்னணி நடிகையான அமலா பால் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

   

கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பால் வெப் சீரிஸில் நடித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரான ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். தற்போது அமலாபால் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அவர் தனது கணவருடன் போட்டோஸ், ரொமான்டிக் வீடியோஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவார். இந்த நிலையில் தனது கையில் ஒரு குழந்தையை வைத்து கொண்டு அமலா பால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram