தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் ‘மைனா’ திரைப்படம் இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
நடிகை அமலா பால் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார்.

#image_title
இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலர் ஜெகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ய அதை ஏற்றுக்கொள்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இவர்களது திருமணம் கேரளா கொச்சியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
View this post on Instagram
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அமலா பால். சமீபகாலமாக தனது கற்பகாலத்தை மிகவும் என்ஜாய் செய்து விடீயோக்களை இவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram