#image_title
நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றவர் தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, வேட்டை, காதலின் சொதப்புவது எப்படி, ஆடை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நடிகையாக வளம் வந்தார். ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிறந்தார். அதை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அமலா பால் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை அமலாபால் குறித்து வட இந்திய மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன ஹேமா கூறியதாவது “ஒருமுறை அமலாபாலுடன் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அது மே மாதம் என்பதால் கடும் வெயில், லொகேஷனில் நிற்பதற்கு ஒரு மரம் கூட இல்லை.
நீண்ட நேரம் வெயிலில் அவதிப்பட்ட காரணத்தினால் நானும் என்னுடன் வந்தவர்களும் அமலா பால் கேரவனுக்கு சென்று அமர்ந்தோம். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்ததை பார்த்த அமலாபால் தன் மேனேஜரை வரவழைத்து எங்களை வெளியேறும்படி கூறினார். நாங்கள் கடும் வெயிலில் எங்கு போய் நிற்போம் என்று அவரிடம் கூறியபோதும் அவர் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எங்களை வெளியில் போக சொன்னார்.
அதன் பின் வேறு வழியில்லாமல் நாங்கள் கேரவனை விட்டு இறங்கி வந்தோம். அந்த படப்பிடிப்பு முடியும் வரை இதுபோன்ற பல சம்பவங்கள் எனக்கு நடந்தது. நான் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு உள்ளேன். அவர்கள் எல்லாம் என்னை அவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள். பிரபல பாலிவுட் நடிகை தபு தனக்கு வேன் எல்லாம் அரேஞ்ச் பண்ணி கொடுப்பார். ஆனால் நடிகை அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். அது என் வாழ்வில் நடந்த மிக மோசமான சம்பவம்” என்று அவர் பகிர்ந்திருந்தார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…