நடிகை அமலா பாலுக்கு குழந்தை பொறந்தாச்சு.. குழந்தைக்கு பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே..!

By Mahalakshmi on ஆனி 17, 2024

Spread the love

நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். இந்த திரைப்படத்தின் மூலமாக பல சர்ச்சைகளை சந்தித்த இவர் அதன் பிறகு மைனா திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னிணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்தார் அமலாபால்.

   

   

தலைவா திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் ஏஎல் விஜய் யை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தனர். விவாகரத்துக்கு பிறகு ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது, பின்னர் மற்றொரு நபருடன் காதல் கிசு கிசு திருமணம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமலாபால் தனது மார்க்கெட்டை இழந்தார்.

 

இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதத்தில் தான் தன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அமலாபால் கர்ப்பமான சூழலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

அவபோவது தனது கணவருடன் மற்றும் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அது மட்டும் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது டான்ஸ் ஆடி மகிழ்ச்சியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இவர் கடந்த 11-ம் தேதி தனது குழந்தை பிறந்ததாகவும், தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் கூறி இருந்தார்.

அவரது அறையின் முழுக்க அலங்காரம் செய்யப்பட்டு குழந்தையை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தன்னுடைய குழந்தைக்கு வித்தியாசமாக ‘இலை’ என்று பெயரிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு பெயரா? என்று கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)