விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி ‘சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கியவர் நடிகை ஆலியா மானசா. இத்தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.இதை தொடர்ந்து இத்தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஐலா, அர்ஷ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜா ராணி சீசன் 1 வெற்றியை தொடர்ந்த ராஜா ராணி 2 தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடரிலும் ஹீரோயினாக நடிகை ஆலியா மானசாவே நடித்து வந்து கொண்டிருந்தார். இரண்டாவது குழந்தை கர்ப்பமாக அந்த சீரியலை விட்டு விலகிய இவர், தற்பொழுது குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆவதால் சின்னத்திரையில் மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.

இவர் தற்பொழுது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய லுக்கிற்குத் திரும்பி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் விஜய் டிவியில் அல்ல, சன் தொலைக்காட்சியில். ஆம் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி அசத்தி வருகிறார்.

இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சஞ்சீவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இருவரும் தங்களது படபிடிப்பு வேலைகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்பொழுது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

நேற்று இவர்களது மகள் ஐலாவின் 3வது பிறந்தநாள் வந்துள்ளது, அதனை வீட்டில் கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோவை ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஐலாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram
