Connect with us

CINEMA

நடிப்பு வரலைன்னு படிச்ச வேலைய செய்ய போன பிரபல நடிகை… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.

   

அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் தனது முழுத்திறமையையும் காட்டி இருந்தார் அதிதி. தற்பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்று வருகிறார். முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அதிதி சங்கர். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் டாக்டர் உடையில் திடீரென தனது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிப்பு வரலைன்னு படிச்ச படிப்புக்கு ஏத்த தொழில் செய்ய ஆரம்பிச்சிடீங்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top