நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவருக்கு திருமணமா?… மணப்பெண் இவர்தானா?… வைரலாகும் திருமண புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்…

By Begam on மாசி 4, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

   

இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதியை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

   

 

நடிகை அதிதி சத்யதீப் தீஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகை அதிதியின் முன்னாள் கணவரான சத்யதீப் தீஸ்ரா பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். தற்பொழுது இவர்களது திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.