சமந்தா, பகத் பாஸில் ஆகியோரை தொடர்ந்து அரிய வியாதியால் சிம்பு பட நடிகையான அடா சர்மா பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானவர் அடா சர்மா. இதற்கு முன்னதாக ஹிந்தியில் பிரபல நடிகையாக கலக்கி வந்த இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் 1920, பீர், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

மேலும் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த பரபரப்புக்கு உள்ளனர். இந்நிலையில் நடிகை அடா சர்மா அரிய வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

இது குறித்து அவர் கூறும் போது எனக்கு எண்டோ மெட்ரியோசீஸ் என்ற அரியவகை வியாதியால் அவதிப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றார். இதனால் தனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் ஒல்லியாக இருந்தேன்.
அதைத் தொடர்ந்து மற்றொரு படத்திற்கு உடல் எடையை கூட்ட வேண்டும் என்று என்னை அதிகம் சாப்பிட சொன்னார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்களை சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் சற்று மாறி உள்ளது. மேலும் அரிய வியாதியும் வந்திருக்கின்றது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்து வருகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஏற்கனவே சினிமாவில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பகத் பாஸிலும் ஒரு அரிய வியாதியால் அவதிப்பட்டு வருவதாக சமீபத்தில் தான் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை அடா சர்மாவும் இது போன்ற ஒரு நோயில் சிக்கி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
