Connect with us

Tamizhanmedia.net

உன்கூட தான் சேர்ந்து வாழ்ந்திட எனக்கு இந்த ஜென்மம் போதுமா…? ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மிரள வைத்த ‘விருமாண்டி’ பட நடிகை…

CINEMA

உன்கூட தான் சேர்ந்து வாழ்ந்திட எனக்கு இந்த ஜென்மம் போதுமா…? ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மிரள வைத்த ‘விருமாண்டி’ பட நடிகை…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. இவர் கமல், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.

   

இதை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி ,தமிழில் அர்ஜுன் நடித்த ‘வானவில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். குறிப்பாக இவர் தமிழில் நடித்த சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ALSO READ  எங்களுக்குள்ள இப்படி தான் லவ் வந்துச்சு.. வீட்ல சொன்னது ரியாக்ஷன் இதுதான்.. முதல் முறையாக மனம் திறந்த நடிகை அபிராமி..!!

நடிகை அபிராமி 2014ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார். 40 வயது ஆகும் நடிகை அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். குழந்தைக்கு கல்கி என்று பெயர் வைத்துள்ளார் அபிராமி.

இவர் நடிப்பில் இறுதியாக ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு போட்டோஷூட் எடுப்பதாக கூறி வெளியிட்ட விடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)

ALSO READ   இந்த வயசுலயும் சும்மா நச்சுன்னு இருக்கீங்க... மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் வீடியோ வெளியிட்ட நடிகை அபிராமி... 

More in CINEMA

To Top