விஷாலும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோமா? முதல் முறையாக உள்ளதை வெளிப்படையாக சொன்ன நடிகை அபிநயா..

By admin on தை 29, 2025

Spread the love

அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி நடிகை. இவருக்கு காது கேட்பதில் குறைபாடு மற்றும் சரியாக பேச வராது. ஆனாலும் தனது அபாரமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவரின் நடிப்பை பார்ப்பவர்கள் அனைவரும் இவருக்கு காது கேட்கவோ வாய் பேசவோ வராது என்பதை நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு கச்சிதமாக நடிப்பார் அபிநயா.

   

அபிநயாவின் தந்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் ஸ்டாலின் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ் சசிகுமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான “நாடோடிகள்” திரைப்படத்தில் அபிநயாவை அறிமுகப்படுத்தினார் சசிகுமார். முதல் படத்திலேயே பிரபலமானார் அபிநயா.

   

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், சம்போ சிவ சம்போ, ஈசன், ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜுடன் இவர் நடித்த “பணி” திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அனைவரும் இவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் அபிநயா விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்கள் அபிநயாவும் விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கிசுகிசு எழுதினர். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிநயா ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.

அபிநயா கூறியது என்னவென்றால, நான் ஏற்கனவே 15 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். எனது Childhood Friend – ஐ தான் காதலிக்கிறேன். இனிமேல் வேறு நடிகர்களுடன் என்னை வைத்து கிசுகிசு எழுதாதீர்கள். விஷால் என்னுடைய நெருங்கிய நண்பர். என்னுடைய Wellwisher கூட. எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. அவர் என்னுடன் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். என்னுடைய இந்த சைகை பாஷையை அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அபிநயா.