தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இதனிடையே மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அபிநயா நடித்திருந்ததை தொடர்ந்து விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அபிநயா தவறாக யார் மீதும் பழி போட வேண்டாம் நான் என்னுடைய நீண்ட கால நண்பர் கார்த்திக்கை காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் இயக்குனர் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அபிநயாவை வாழ்த்தினார். இந்நிலையில் அபிநயா சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னைக்கு நான் என்னோட அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்.

எங்க அம்மா மட்டும் இருந்திருந்தால் எனக்கு என்ன வேணும் என்று எனக்கு பிடித்த மாதிரி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சு இருப்பாங்க. எங்க அம்மா தான் எனக்கு எல்லாமாவா இருந்தாங்க. நான் பேச நினைப்பதை அவங்க பேசிருவாங்க. எங்க அம்மா சாகறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிட்டாங்க. கட்டாயம் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எங்க அம்மா சத்தியம் வாங்குனாங்க. அவங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தது போலவே இன்னைக்கு எனக்கு திருமணம் நடந்து விட்டது. எங்க அம்மா இதையெல்லாம் பார்த்து என்ன மேல இருந்து ஆசிர்வாதம் பண்ணிட்டு தான் இருப்பாங்க. இன்னைக்கு கூட எங்க அம்மா என் கூட இல்லாத மாதிரி எனக்கு தெரியல.
கல்யாணம் முடிஞ்சு நான் என்னுடைய கணவர் வீட்டுக்கு போறேன் எங்க அம்மா எங்க வீட்ல தான் இருக்காங்க என்று தான் எனக்கு மனசுல ஒரு எண்ணம் இருக்கு. இப்போ எங்க அம்மா இருந்திருந்தா எனக்கு பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் அவங்க கிட்ட கேட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்து நான் அழகா இருக்கேனா என்று எங்க அம்மா கிட்ட நான் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதையே தான் நான் இப்பவும் கேட்பேன். எங்க அம்மா கிட்ட கெடச்சத என்னுடைய கணவர் கிட்ட நான் இப்போ முடிஞ்ச அளவுக்கு பாத்துட்டு இருக்கேன். அவரும் என்ன எங்க அம்மா அளவுக்கு நல்லா தான் பார்த்திருக்கிறார் என்று தனது மறைந்த அம்மா குறித்து அபிநயா உருக்கமாக பேசியுள்ளார்.
