Categories: TRENDING

எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்.. வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

நேற்று (02.02.2024) நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரின் தனது கட்சி பெயரை அறிவித்தது தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் அரசியலில் நுழைவது என்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமாவிலும் சாதாரண ஒரு விஷயம் தான். அப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் யார்? வெற்றி பெறாதாவர்கள் யார்? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்…

#mgr

எம்.ஜி.ஆர் :

தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி இவரது பெயர் இன்றி நம்மால் நகரவே முடியாது எனலாம். சினிமா என்பது மக்களின் இன்றியமையாத ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிய காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் எம்.ஜி.ஆர். இவரை அரசியலில் நுழைத்து விட்டது கலைஞர் கருணாநிதி. திமுகவிற்கு ஆதரவு தந்தவர், பின்பு அங்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து அதிமுக என்ற தனிக் கட்சியை 1972-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்தை மக்கள் அளித்தனர். அவரும் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராய் வாழ்நாள் முழுவதும் அதிமுகவிலேயே இருந்தார். அதிமுகவும் வெற்றிப் பாதையிலேயே இருந்தது.

#sivaji

சிவாஜி :

இன்று அஜித்-விஜய் போல் 1960, 1970, 80களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில்
சிவாஜியும் ஒருவர். எம்.ஜி.ஆர்-சிவாஜி இருவருக்கும் தான் சினிமாவில் போட்டியே இருக்கும். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆர் மட்டும் கட்சி தொடங்கினால் எப்படி? நாமும் தொடங்குவோம் என 1989-ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார் சிவாஜி. ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலில் ஜொலித்தது போல், சிவாஜியால் ஜொலிக்க முடியவில்லை. பலருக்கும் அவர் அரசியல் கட்சி தொடங்கினதே தெரியாமல் இருந்தது. காலப்போக்கில் அக்கட்சியும் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

#bhakyaraj

பாக்யராஜ் :

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் எம்ஜிஆரின் பக்தனாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். எம்ஜிஆருக்கும் பாக்யராஜ் என்றால் அலாதி பிரியம். எம்.ஜி.ஆர் மேல் கொண்ட பற்றால் 1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால் சொல்லும்படியாக அக்கட்சிக்காக அவர் அரசியல் பிரவேசம் செய்யவில்லை என்பதால், அக்கட்சி காலப்போக்கில் மறைந்து விட்டது.

#T.Rajendar

டி.ராஜேந்தர் :

பாக்யராஜைப் போலவே, சினிமாவில் பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தரும் அரசியலில் கால் பதிக்க முயன்றார். 1991-ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். அவ்வப்போது செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தி வந்தவர், உடல்நிலை பாதிப்பால் பின்னாளில் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார்.

#Vijayakanth

விஜயகாந்த் :

கேப்டன் என அன்போடு மக்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர் எனவும் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு எப்படி சினிமாவில் இருந்த ரசிகர்கள், பின்னாளில் அரசியலுக்கு வரும் போது அவரை ஆதரித்தனரோ, அதேப் போல, விஜயகாந்திற்கும் அரசியலில் ஆதரவு இருந்தது. 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியவர், குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார். அடுத்த முதலமைச்சர் அவர் தான் என மக்கள் நம்பியப் போது, அவரது உடல்நலம் அவரை கைவிட்டது. பற்பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

#Sarathkumar

சரத்குமார் :

சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார் 2007-ம் ஆண்டு இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சி சில முறை அதிமுகவுடன் ஆட்சி அமைத்தது. தென்காசி சட்டமன்ற தொகுதியில் அவருக்கு செல்வாக்கும் இருந்தது. இப்போது வரை இந்தக் கட்சி இருக்கிறது தான், ஆனால் சரத்குமாரோ சினிமாவில் பிசியாகி விட்டார்.

#Karthick

கார்த்திக் :

நவரச நாயகனான கார்த்திக், கடந்த 2009-ம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி என்னும் கட்சியை தொடங்கினார். ஆனால் இக்கட்சியை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், காலப்போக்கில் கட்சி மறைந்து போனது.

#Karunas

கருணாஸ் :

நகைச்சுவை நடிகரான கருணாஸ் 2011-ம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்னும் கட்சியை தொடங்கினார். குறிப்பிட்ட சாதியின் முன்னேற்றத்திற்காக கட்சி தொடங்கியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எம்.எல்.ஏவும் ஆனவர், பின்னாளில் தனது சாதிய கருத்துகளால் செல்வாக்கை குறைத்து கொண்டார்.

#Kamalhaasan

கமல்ஹாசன் :

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது அவருக்கு ஆதரவு அதிகம் இருந்தது. 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டார். ஆனால் நூழிலையில் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை இழந்தவர், பிறகு மீண்டும் சினிமா, பிக்பாஸ் என பிழைப்பை பார்க்க சென்று விட்டார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற பேச்சும் அடிப்படுகிறது.

#Mnsoor alikhan

மன்சூர் அலிகான் :

80ஸ் 90ஸ் களில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தனது எதார்த்த கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குபவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்னும் கட்சியை தொடங்கினார். இன்றும் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் மன்சூர் அலிகானின் கட்சி எங்கிருக்கிறது என்ன செய்கிறது என்பது தான் மக்களுக்கு தெரியவில்லை.

#Vijay

விஜய் :

ரஜினி-கமலுக்கு அடுத்தப் படியாக, அடுத்த தலைமுறை நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜய். வசூல் நாயகனாக இருந்து வரும் விஜய், நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறார், வரப்போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று (02.02.2024)-ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ள நிலையில், இவரது அரசியல் பிரவேசம் எம்.ஜி.ஆரைப் போல வெற்றியில் முடியுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Divya

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

56 நிமிடங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

58 நிமிடங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

1 மணி நேரம் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

2 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

3 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

5 மணி நேரங்கள் ago