தமிழ் சினிமாவுல அந்த ரெண்டு பெரிய ஹீரோஸ் கிட்ட உதவி கேட்டன், அவுங்க கண்டுக்கல.. கடைசில விஜயகாந்த் தான் செஞ்சாரு.. விவேக்கே சொன்ன விஷயம்..

By Sumathi

Updated on:

நடிகர் விவேக் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படுபவர். நகைச்சுவையில் அவர் தொட்ட உச்சங்கள் ஏராளம். ரஜினியுடன் சிவாஜி படத்தில் தன் நடிப்பு ஆளுமையை வெளிப்படுத்தி இருப்பார் விவேக். விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் விவேக்.

   

அவர் கூறியதாவது, விஸ்வநாதன் ராமமூர்த்தின்னு ஒரு படம். அதுல நான் கதாசிரியராக வருவேன். சினிமா கதை சொல்றவரா வருவேன். அப்போ ராமநாதன் சார்தான் இந்த படத்தோட டைரக்டர். நீங்க கதாசிரியரா இருக்கறதால, ஏதாவது பெரிய ஹீரோகிட்ட கதை சொல்ற மாதிரி இருந்தா அந்த சீன் நல்லா இருக்கும், என்றார். ஓகே சார், அந்த மாதிரியே பண்ணிடலாம் என்று சொன்னேன்.

அப்போ இந்த இரண்டு ஹீரோஸ் வளர்ந்து வர்ற முக்கிய இளம் ஹீரோக்களா பீக்குல இருந்தாங்க. நான் அவங்க கூட நிறைய படம் பண்ணியிருந்தேன். அப்போ கேப்டன் பெரிய லெவலில் இருந்தார். அதனால் இளம் நடிகரில் ஒருவரை அணுகினேன். நல்லா இருக்கு விவேக், ஆனால் வீட்டுல கொஞ்சம் கேட்கணும் அப்படீன்னு சொல்லிட்டு விலகிட்டார்.

இன்னொரு ஹீரோகிட்ட பேசினப்போ, இப்போ நான் இருக்கிற லெவலுக்கு உங்களுக்காக வேறொரு படத்துல இப்படி நடிச்சேன்னா, என்னோட மார்க்கெட் ரேட் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகும். டிஸ்டிரிப்யூட்டர்ஸ் எல்லாம், என்ன சார் இவர் எல்லார் கூடயும் போய் நடிக்கிறாரு, இவருக்குன்னு ஒரு வியாபாரம் இருக்குதுன்னு சொல்வாங்க. கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்குன்னாரு, அப்படீன்னு சொன்னாரு என்று கூறியிருக்கிறார் நடிகர் விவேக்.

நடிகர் விவேக் குறிப்பிடும் அந்த இரண்டு இளம் நடிகர்கள் விஜய், அஜீத்குமார் இருவரும்தான். அவர்கள்தான் விவேக் உடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி படம் எடுக்கப்பட்ட சமயத்தில், வளர்ந்துவரும் இளம் நடிகர்களாக பீக்கில் இருந்தவர்களும் விஜய் மற்றும் அஜீத்குமார்தான். ஆனால், அவர்கள் விவேக்குடன் பல படங்களில் நடித்தும் உதவ முன்வரவில்லை. ஆனால் நடிகர் கேப்டன் விஜயகாந்த், விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில், விவேக் கதை சொல்லும் காட்சியில் கெஸ்ட் ரோலில் மிக அழகாக நடித்துக் கொடுத்திருப்பார்.

தமிழ் என்பது நம் கண்கள் மாதிரி. ஆங்கிலம் என்பது நம் கண்களில் போடற கண்ணாடி. தேவைப்படற நேரத்துல ஆங்கிலம் பேசறது தப்பில்ல. ஆனால், நம் கண்களான தமிழ் மொழிதான் எப்பவுமே நமக்கு உயர்வானது என அந்த காட்சியில் கூறியிருப்பார் கேப்டன் விஜயகாந்த். ஆனால் விவேக்குடன் பல படங்களில் நடித்த விஜய், அஜீத்குமார் அவருடன் நடிக்க மறுத்திருப்பதே அவர்களது பண்பற்ற குணத்தை காட்டி விட்டது.

author avatar
Sumathi