பொதுவாகவே சினிமா என்பது போட்டிகள் நிறைந்த ஒரு தனி உலகம் தான். வெற்றி படங்களை கொடுத்து தன்னுடைய சம்பளத்தை ஏற்ற வேண்டும் என்பதை விட போட்டி நடிகர்களுடன் ஒப்பிட்டு தங்களுடைய சம்பளத்தை நடிகர்கள் பலரும் உயர்த்துகின்றார்கள். இவர்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட பாதிக்கப்படுவது என்னவோ தயாரிப்பாளர்கள் தான். ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் நடிகர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. விஜயின் சம்பளத்தை பார்த்து அவருக்கு முன்பே நடிக்க வந்த ரஜினி தனது சம்பளத்தை உயர்த்தினார். அதனைப் போலவே நான்கு வருடங்கள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் என்ற ஒரே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய சம்பளத்தை 100 கோடிக்கும் மேல் உயர்த்தினார்.
ஆனால் அதற்கு முன்பு கமல்ஹாசன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் என்னவோ வெறும் 30 கோடி மட்டும் தான். கல்கி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பதற்கு கமல்ஹாசன் 150 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது. நடிகர்கள் தங்களுடைய படங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றதோ அதை வைத்தே சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி யாரும் யோசிப்பது கிடையாது. சிம்பு சிறுவயதிலிருந்தே நடித்து வரும் நிலையில் ஒழுங்காக படப்பிடிப்புக்கு செல்லாமல் குடைச்சல் கொடுத்து தன்னுடைய பெயரை அவரே கெடுத்துக் கொண்டார்.
ஒரு படத்தை ஹிட் கொடுத்தாலும் தொடர்ந்து இரண்டு படங்கள் பிளாப் கொடுப்பார். சிம்புவுக்கு பிறகு நடிக்க வந்த தனுஷ் சிம்புவை ஓவர் டேக் செய்து சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதே சமயம் தற்போது இயக்குனராகவும் தனுஷ் மாறிவிட்டார். இறுதியாக தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதனைப் போலவே சிம்புவும் தற்போது தக் லைப் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க உள்ளார். இப்படியான நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் பிறகு நடிக்க வந்த சிவகார்த்திகேயன் இவர்களை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார். இறுதியாக அமரன் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டியில் பேசுகையில், டான், டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்து விட்டு தன்னுடைய சம்பளத்தை சிவகார்த்திகேயன் 30 கோடியாக மாற்றினார். தனுஷ் அப்போது பத்து கோடியும் சிம்பு எட்டு கோடியும் தான் சம்பளம் வாங்கி வந்தனர். மாநாடு திரைப்படத்திற்கு சிம்பு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் என்றால் நாங்கள் அவருடைய சீனியர் எங்களுக்கும் 35 கோடி கொடுங்கள் என்று கேட்கின்றனர். சிவகார்த்திகேயனைப் போல நாங்களும் பிற்படத்தை கொடுக்கிறோம் நல்ல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை தேர்வு செய்து கதையை தேர்வு செய்து நடிக்கிறோம் என்று சொன்னால் அது ஒரு விதத்தில் நியாயம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் சம்பளத்தில் மட்டும் போட்டி போடுகிறார்கள் என்று திருப்பூர் சுப்பிரமணியம் பொங்கி எழுந்துள்ளார்.
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…