மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் மம்முட்டி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள தான் முன்பு வசித்து வந்த வீட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றி வெளியூர்களில் இருந்து கேரளா வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தினசரி வாடகை அடிப்படையில் வாடகைக்கு விட்டு வருகின்றார். இவருடைய வீட்டில் சென்று தங்குகிறோம் என்று ஆர்வத்தில் தினமும் பலரும் கொச்சியில் உள்ள மம்முட்டி வீட்டை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி மம்முட்டி தனது வீட்டை வாடகைக்கு விட்டு கல்லா கட்டி வரும் நிலையில் மற்றொரு நடிகரும் தனது வீட்டை வாடகைக்கு விட்டு வருகிறார்.

அதாவது நடிகர் மோகன்தாலும் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக தற்போது தினசரி வாடகைக்கு விட தொடங்கியுள்ளார். ஆனால் கேரளாவில் கிடையாது. ஊட்டியில் இருக்கக்கூடிய அவரது கெஸ்ட் ஹவுஸ் தினமும் 37 ஆயிரம் ரூபாய் வாடகை விதத்தில் வாடகைக்கு விட்டு வருகின்றார். இந்த வீட்டில் மூன்று தங்கும் முறைகள் உட்பட அனைத்து விதமான வசதிகளும் அடங்கியுள்ளதாம். மேலும் மறைக்கார் படத்தில் தான் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகள் உள்ளிட்டஆயுதங்களை அங்குதான் பொருட்காட்சி போல மோகன்லால் பார்வைக்கு வைத்துள்ளார்.

அவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. மேலும் எப்போதெல்லாம் மோகன்லால் ஊட்டிக்கு வந்து தங்கி செல்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு ருசியான உணவை சமைத்து போட்ட ஆஸ்தான சமையல் காரரும் அங்கு வந்து தங்கக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தேவைக்கு ஏற்ப உணவை சமைத்துக் கொடுத்து வருகிறாராம். தற்போது இந்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
