நடிகர்கள் அரசியலுக்கு வரலாம், ஆனா வந்துட்டு நடிக்க கூடாது…. சரத்குமார் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. தற்போது விஜய்யும் தேர்தல் களத்தில் இருப்பதால் 2026 தேர்தல் களம் யாருக்காக இருக்கும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடிகை நமீதா, அவருடைய கணவர் இணைந்து புதிய நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனவே நடிகர்களும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலிலும் நடிக்க கூடாது. அங்கு அவர்கள் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அரசியலுக்கு வருபவர்களின் தகுதி, அவர்கள் பேசக்கூடிய விஷயங்கள், அவர்கள் என்ன செய்ததற்காக அரசியலுக்கு வந்துருக்கிறார்கள்? அதை செயல்படுத்தும் திறமை அவர்களுக்கு இருக்கின்றதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.