சிம்பிளாக நடந்து முடிந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்…. வைரலாகும் புகைப்படங்கள் ….

By santhoshinikarthik on ஆவணி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ரட்சகன் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்தவர் தான் நாகார்ஜூன். ஆனால் இவர் தெலுங்கு திரை பட  நடிகர் ஆவார்.  தமிழ் சினிமாவிலும் அதிகமாக நடித்து வந்தார். மேலும் இவரது மகன் தான் நாக சைதன்யா .இவர் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் .

   

மேலும் 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவைச் சேர்ந்த சமந்தாவிற்கும் நாகசைய்தன்யாவிற்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.நாக சைதன்யாவும் சமந்தாவும்  4 வருடங்களாக தனது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தனர்.

   

 

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். சைதன்யா விவாகரத்திற்கு பின்பு சோபியா துலிபாலா  என்பவருடன் பழகி வருவதாக கூறிவந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல சைதன்யா மற்றும் சோபியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் இது பற்றி சைதன்யா மற்றும் சோபியா அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும்  கூறவில்லை என்ற நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறியுள்ளனர் . இதனை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா அடுத்த ஆண்டு  இருவரும் திருமணம் செய்து கொள்வதாக உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என  தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.