சபரிமலைக்கு சென்ற நடிகர் யோகி பாபு… டோலி மூலமாக மலையேற்றம்… கமெண்ட் பக்கத்தில் வைச்சு செய்யும் நெட்டிசன்கள்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனியுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தார். கடந்த வாரம் கூட இவர் நடிப்பில் குய்கோ எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து  அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். நடிகர் யோகி பாபுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளது.

தற்பொழுது இவர் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். அப்பொழுது நடந்து செல்லாமல் நடக்க இயலாதவர்களை தூக்கி செல்லும் 4 நபர்களை கொண்டு தூக்கிய படி மலை எறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘ஏன் நடந்து போனா உடம்பு குறைஞ்சிருமா..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..