Connect with us

CINEMA

சினிமா,  கிரிக்கெட் இரண்டுலயும் கில்லி தான்… Bowler, batsman என மாறி மாறி கலக்கும் நடிகர் யோகி பாபு… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதைக்கவனித்த நடிகர் விஜய் கூட நடிகர் யோகி பாபுவுக்கு சமீபத்தில் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் யோகி பேட்ஸ்மேன் , பௌலர் என கிரிக்கெட்டில் பின்னி பெடலெடுக்கும் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Continue Reading

More in CINEMA

To Top