கோவிலை விட்டு வெளியே வரும்போது யோகி பாபுவின் கைகளை திடீரென பிடித்துக் கொண்ட பாட்டி… அவர் என்ன செய்தார் தெரியுமா..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுமட்டுமின்றி ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து கலக்கியுள்ளார் .

   

ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனியுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தார்.மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த குய்கோ எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு அதிக கடவுள் பக்தியும் கொண்டவர். அவ்வப்பொழுது கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yfcsriram (@yfcsriram)

அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கோவிலை விட்டு வரும்பொழுது பாட்டி ஒருவர் நடிகர் யோகி பாபுவின் கையை திடீரென பிடித்துக் கொண்டார். முகம்சுளிக்காத நடிகர் யோகி பாபு அவரிடம் சிரித்தவாறு சில நிமிடங்கள் பேசி விட்டு சென்றார். நடிகர் யோகி பாபுவின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yfcsriram (@yfcsriram)

author avatar