பழனி முருகனை தரிசிக்க வந்த நடிகர் யோகி பாபு… ரவுண்டு கட்டிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ இதோ…

By Begam on ஆவணி 16, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

   

இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவருக்கு எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

   

 

இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது  நடிகர் யோகிபாபு மலேசியாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் புதிய திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.  இதைத்தொடர்ந்து நடிகர் யோகி பாபு கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலானது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது சுவாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவருடைய ரசிகர்கள்  குவிந்த வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…