மிகவும் எளிமையாக வீட்டிலேயே நடந்து முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.. புகைப்படங்கள் வெளியாகி வைரல்..

By Priya Ram

Published on:

நகைச்சுவை நடிகரான விவேக் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். 1990-களில் துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். புது புது அர்த்தங்கள், பெண்ணின் மனதை தொட்டு, மின்னலே, தூள், நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விவேக் தனது நகைச்சுவையால் மக்களின் மனதை ஈர்த்தார். விவேக் காமெடி என்றாலே ரசிகர்களிடம் தனி மவுசு இருந்தது.

   

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருதை வென்றார். இது போக ஃபிலிம்பேர், விருதுகள் தமிழக அரசின் விருதுகளையும் தன் வசப்படுத்தினார். நகைச்சுவை நடிகர் விவேக் அருட் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி, பிரசன்னா குமார் என்ற மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர்.

இதில் பிரசன்ன குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி என்பவருக்கும் பரத் என்பவருக்கும் உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

பின்னர் வடபழனியில் இருக்கும் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை விவேக் தனது லட்சியமாக வைத்திருந்தார். அதனை நிறைவேற்றும் பொருட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு மரக்கன்று கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram