டைவர்ஸ் செய்த முதல் மனைவி மகனின் பிறந்தநாளை…  2-வது மனைவியுடன் கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்… அவரே வெளியிட்ட வைரல் போட்டோஸ்…

By Divya

Published on:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான்  நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

   

அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் லால் சலாம் திரைப்படம்  வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷ்ணு விஷால் இவர்  நட்ராஜ் என்பவரை முதன் முதலில் திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் , கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும், தொடர்ந்து தனது மகன் ஆர்யான் உடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது மகனின் பிறந்தநாளை, தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாடிய  புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.